டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன்

Published On 2025-06-06 04:06 IST   |   Update On 2025-06-06 04:06:00 IST
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
  • இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

பாரிஸ்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இதில் கலப்பு இரட்டையரில் இத்தாலியின் சாரா எரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, நான்காம் நிலை ஜோடியான அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்-இவான் கிங் ஜோடியுடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 6-2 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினர்.

Tags:    

Similar News