விளையாட்டு

ரோகித் சர்மாவுடன் ஓபனிங்கில் இவரை களமிறக்கலாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

Update: 2022-08-12 08:26 GMT
  • ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
  • கேஎல் ராகுல் கீழ் வரிசையில் ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர் விருப்பம்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகளுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்த தொடர் முக்கியமானதாக இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஆகஸ்ட் 28-ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குரூப் ஏ போட்டியில் மோதுகின்றன. கடைசியாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2021 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார், ஆனால் தற்போது ரோகித் சர்மா தலைமை வகிக்கிறார்.

ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் அவருடன் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ள நிலையில் ரோகித் சர்மாவுடன் சூர்ய குமார் யாதவ் விளையாடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-


ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக தொடர விரும்புகிறேன். தொடக்க ஆட்டக்காரராக ரோகித்துடன் நிலைத்து நின்று சிறப்பாக ஆடுகிறார்.

கேஎல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அவர் கீழ் வரிசையில் ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்துள்ளார் மற்றும் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் ரன்களை குவித்துள்ளார்.

எனவே, கேஎல் ராகுலுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் ரோகித்துடன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினால் அணிக்கு பலம் சேர்க்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News