விளையாட்டு
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி
- ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகின்றன.
- இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்றார்.
முலீம் ஆன்தெர்ரூர்:
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் தொடர் முலீம் ஆன்தெர்ரூர் நகரில் நடைபெற உள்ளன.
இதில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக நம்பர் 1 வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, கிரண் ஜார்ஜ், வீராங்கனை தான்வி சர்மா உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், மலேசியாவின் மிகோலஜ் உடன் மோதினார்.
இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த், தைவானின் லின் சுன் யீ உடன் மோதுகிறார்.