விளையாட்டு

SRH அணியின் கேப்டனாக கம்மின்ஸ் தொடர்வார் என அணி நிர்வாகம் அறிவிப்பு

Published On 2025-11-18 08:18 IST   |   Update On 2025-11-18 08:18:00 IST
  • கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
  • தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News