விளையாட்டு

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா சென்

Published On 2026-03-05 21:44 IST   |   Update On 2026-03-05 21:44:00 IST
  • ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
  • இந்தியாவின் லக்‌ஷயா சென் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

பெர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹாங்காங்கின் ஆங்கஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-19 என கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை ஆங்கஸ் 23-21 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லக்ஷயா சென் 21-10 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

Tags:    

Similar News