கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலிய அணிக்கு எந்த இந்திய வீரர் மிகவும் பொருத்தமானவர்- ஆடம் கில்கிறிஸ்ட் அளித்த பதில் வைரல்

Published On 2025-10-30 17:58 IST   |   Update On 2025-10-30 17:58:00 IST
  • ஆஸ்திரேலியா -இந்தியா அணிகள் ஒருநாள், டி20 தொடரில் விளையாடுகிறது.
  • ஆஸ்திரேலியா தொடருக்காக ரோகித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்தார்.

அடிலெய்டு:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இந்திய அணி தொடரை இழந்தாலும் தொடரின் நாயகனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

பல விமர்சனங்களுக்கு மத்தியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் களமிறங்கினர். விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல ரோகித் சர்மாவும் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. ஆனால் 2-வது போட்டியில் அரைசதமும் 3-வது போட்டியில் சதமும் அடித்து அசத்தினார்.

இருவரும் 38 வயதை கடந்த போதிலும் உடல்தகுதியுடன் உள்ளதாக முன்னாள் வீரர்கள் முதல் பிற நாட்டு வீரர்கள் வரை புகழாரம் சூட்டினர். இந்த தொடருக்காக ரோகித் சர்மா 10 கிலோ உடல் எடையை குறைத்தார்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எந்த இந்திய வீரர் மிகவும் பொருத்தமானவர் என அந்த அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டின் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா தான் என பதிலளித்தார். அவர் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News