கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பையை தக்கவைக்குமா இந்தியா?: இன்று இறுதிப்போட்டி #T20WorldCup

Published On 2026-03-08 03:57 IST   |   Update On 2026-03-08 03:57:00 IST
  • டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.
  • இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

அகமதாபாத்:

இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைக்கக் காத்திருக்கிறது. அதாவது, தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் முதல் அணி என்பதோடு 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து மூன்றாவது ஐசிசி கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற இந்தியா போராடும்.

மறுபுறம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, தனது முதல் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 33 பந்துகளில் சதமடித்து மிரட்டியிருப்பதால், இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Tags:    

Similar News