#T20WorldCup2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் முதல் முறையாக களமிறங்க உள்ள 6 வீரர்கள்
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன.
- இந்திய அணியில் உள்ள ஆறு வீரர்கள் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறார்கள்.
டி20 உலகக் கோப்பை 2026 இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையில், தற்போதைய இந்திய அணியில் உள்ள ஆறு வீரர்கள் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட இருக்கிறார்கள்.
அதன்படி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர்.
இதில் வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை தோற்கடித்தபோது அணியில் இருந்தனர். அதேபோல் இஷான் கிஷன், ஐசிசி உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். 2024 டி20 உலகக்கோப்பையில் மாற்று வீரராக (Reserve) ரிங்கு சிங் இருந்தார்.
இதனால், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகிய மூவரும் முதல் முறையாக ஐசிசி இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளனர்.