கிரிக்கெட் (Cricket)
விராட்கோலி- அனுஷ்கா தம்பதி அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்
- உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான இந்திய வீரர் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இன்று மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதேபோல அனுமர் கோவிலிலும் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது விராட்கோலி நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார்.