வீடியோ: 2027 உலக கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவார்களா? ஹெட் கொடுத்த பதில் வைரல்
- விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர்.
- ரோகித் தொடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. வருகிற 19-ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆட்டத்தைப் பார்ப்பதற்காக இருநாட்டு ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இருவரும் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாடுவார்களா என டிராவிஸ் ஹெட்டிடம் செய்தியார்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிராவிஸ் ஹெட் அளித்த பதில்:-
அவர்கள் இந்தியாவுக்கான அற்புதமான வீரர்கள். அவர்கள் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகவும் தரமான 2 வீரர்கள். விராட் கோலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிரேட்டஸ்ட் பிளேயர். ரோகித் சர்மா அந்தளவுக்கு கிடையாது.
இருப்பினும் ரோகித் சர்மா தொடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அவர்கள் மிஸ் செய்யப்படுவார்கள் என்று உறுதியாகச் சொல்வேன். ஆனால் அவர்கள் 2027 வரை விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முயற்சி செய்வார்கள். அதுவரை அவர்கள் விளையாடினால் அது கிரிக்கெட்டுக்கு சிறப்பானது.
என்று ஹெட் கூறினார்.