கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக் கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்

Published On 2026-02-12 18:36 IST   |   Update On 2026-02-12 18:37:00 IST
  • இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது.
  • கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.

காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் இல்லை.

Tags:    

Similar News