கிரிக்கெட் (Cricket)
null

டி20 உலகக் கோப்பை 2026: ஓமன் அணிக்கு 226 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

Published On 2026-02-12 12:44 IST   |   Update On 2026-02-12 13:02:00 IST
  • டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்து வீசியது.
  • கேப்டன் தசுன் ஷனகா அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார்.

டி20 உலகக் கோப்பை 2026 தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் 16வது போட்டியில் இலங்கை மற்றும் ஓமன் அணிகள் மோதின. இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசியது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க வீரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷ்ரா முறையயே 13 மற்றும் 8 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் பவன் ரதன்யாகே ஜோடி நிலையாக ஆடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குசல் மென்டிஸ் 45 பந்துகளில் 61 ரன்கள் (7 பவுண்டரிகள்), பவன் 28 பந்துகளில் 60 ரன்கள் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் தசுன் ஷனகா அபாரமாக ஆடி அரைசதம் கடந்தார். 20 பந்துகளில் 50 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்த நிலையில் தசுன் ஷனகா தனது விக்கெட்டை இழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை குவித்துள்ளது. ஓமன் சார்பில் ஜிதென் 2 விக்கெட்டுகளையும், ஜே ஒடெட்ரா, சுஃப்யான் மெஹ்மூத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News