கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை 2026: அயர்லாந்து அணிக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Published On 2026-02-11 16:47 IST   |   Update On 2026-02-11 16:47:00 IST
  • ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
  • மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 14வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. கொலம்போவில் நடந்த இந்தப் போட்டியி் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டிராவிஸ் ஹெட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் 17 பந்துகளில் 37 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்), அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 11 பந்துகளில் 21 ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்சர்கள்) எடுத்தனர்.

மேட் ரென்ஷா 33 பந்துகளில் 37 ரன்கள் (2 பவுண்டரிகள்), கிளென் மேக்ஸ்வெல் 9 ரன்கள் (1 பவுண்டரி), மார்கஸ் ஸ்டொய்னிஸ் 29 பந்துகளில் 45 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) அடித்தனர். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்தது. 

Tags:    

Similar News