இந்திய வீரர்கள் பேட்டில் ரப்பர்: எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது- ராஜபக்சே விளக்கம்
- இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே கூறினார்.
- அவர்கள் பெரிய ஹிட் ஷாட்களை சிறப்பாக விளையாடுவதாகவும் இலங்கையின் முன்னாள் வீரர் பனுகா ராஜபக்சே கூறியிருந்தார்.
இந்திய வீரர்களின் பேட்டில் ரப்பர் பகுதி இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் அவர்கள் பெரிய ஹிட் ஷாட்களை சிறப்பாக விளையாடுவதாகவும் இலங்கையின் முன்னாள் வீரர் பனுகா ராஜபக்சே கூறியிருந்தார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறியது..
இந்திய வீரர்கள் பேட்டில் ரப்பர் இருக்கிறது என்று பேசிய கருத்திற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், தன்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக பனுகா ராஜபக்சே விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, எனது கருத்து முழுக்க பாராட்டுக்குரியது. இந்திய கிரிக்கெட் அதன் உள்கட்டமைப்பு முதல் உபகரணத் தரநிலைகள் வரை நம்பமுடியாத அளவிற்கு முன்னேறியுள்ளது. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உண்மையிலேயே உலகின் சிறந்த உற்பத்தியாளர்களில் ஒருவர்.
நான் தெளிவாக இதை விளக்கியிருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டின் மீது எப்போதும் மரியாதையைத் தவிர வேறு எதுவும் இல்லை என ராஜபக்சே கூறியுள்ளார்.