உலகக் கோப்பையில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்: சாதனை படைத்த நியூசிலாந்து
- உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது நியூசிலாந்து அணி.
- ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
சென்னை:
சென்னையில் நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய சேசிங் செய்த நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களான பின் ஆலன், டிம் செய்பர்ட் ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப அமைத்து, உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அமைத்த ஜோடி என்ற வரலாற்று சாதனையை ஏற்படுத்தியது.
உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து அணி ஏற்படுத்தியது.
இந்தப் பட்டியலில், இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி 170* ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் மற்றும் குயிண்டன் டி காக் ஜோடி 168 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கையின்
குமார் சங்கக்காரா, மகேல ஜெயவர்த்தனே ஜோடி 166 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.