கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தானிடம் கெஞ்சிய இலங்கை

Published On 2026-02-06 13:45 IST   |   Update On 2026-02-06 13:45:00 IST
  • இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது.
  • பாகிஸ்தான் அணியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பிப்ரவரி 15-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் நிதி இழப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை இலங்கை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த இழப்புகள் இலங்கைக்கு மட்டுமல்லாது தொடரில் பங்கேற்றுள்ள பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. மேலும், 2009-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கிய போது, தங்கள் அணி பல்வேறு முறை அங்கு பயணித்து கிரிக்கெட் விளையாடியதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இலங்கையின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News