கிரிக்கெட் (Cricket)
பார்டர்-கவாஸ்கர் தொடரில் அதிக கேட்ச்: லட்சுமண், பாண்டிங் சாதனையை சமன் செய்த ஸ்மித்
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்.
சிட்னி:
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 2 கேட்ச் பிடித்தார்.
இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக கேட்ச் செய்த வீரர்களில் இரண்டாவது இடத்தை ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவின் லட்சுமண், ஆஸ்திரேலியாவின் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டார்.
இவர்கள் மூவரும் தலா 36 கேட்ச் பிடித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் 46 கேட்ச் பிடித்து முதலிடத்தில் உள்ளார்.