கிரிக்கெட் (Cricket)

3 வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டனாக முதல் போட்டி: விராட் கோலியுடன் மோசமான சாதனையில் இணைந்த சுப்மன் கில்

Published On 2025-10-19 19:01 IST   |   Update On 2025-10-19 19:01:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக அறிமுகம் ஆனார்.
  • மழையால் ஆட்டம் 26 ஓவராக குறைக்கப்பட்டு, ஆஸ்திரேலியா 131 இலக்கை எளிதாக எட்டியது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. அடிக்கடி மழை குறுக்கீடு செய்ததால் இந்தியா இடைவெளி விட்டுவிட்டு 26 ஓவர்களே விளையாடின. இதில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது. ஒரு கட்டத்தில் 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 26 ஓவராக குறைக்கப்பட்டது. 9.2 ஓவரில் 84 ரன்கள் அடித்தது.

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேயாலியாவுக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 21.1 ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி சுப்பன் கில்லுக்கு கேப்டனாக முதல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த 2ஆவது இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக விராட் கோலி கேப்டனாக விளையாடிய முதல் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார்.

என்றாலும் பின்னர் விராட் கோலி கேப்டன் காலத்தில் இந்தியா அபாரமான சாதனைகளை படைத்துள்ளது. அதேபோல் சுப்மன் கில் தலைமையின் கீழ் இந்தியா சாதனைகளை படைக்கும் என நம்பிக்கை வைப்போம்.

Tags:    

Similar News