கிரிக்கெட் (Cricket)

கோலியை காப்பியடிக்கிறார்- சுப்மன் கில்லை கடுமையாக சாடிய மனோஜ் திவாரி

Published On 2025-07-21 20:24 IST   |   Update On 2025-07-21 20:24:00 IST
  • டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம்.
  • நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.

லண்டன்:

இந்திய டெஸ்ட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலியின் ஆக்ரோஷமான பாணியை பின்பற்றுவதை செய்வதை நிறுத்திவிட்டு, தனது இயல்பான ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கேப்டன் சுப்மன் கில் விஷயங்களைக் கையாளும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. கடந்த காலத்தில் விராட் கோலி செய்ததை அவர் காப்பி அடிக்க முயற்சிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அது அவரது பேட்டிங்கிற்கு உதவவில்லை.

அவர், "ஐபிஎல்-ல் கேப்டன் ஆனதிலிருந்தே, அவர் ஒரு ஆக்ரோஷமான மனநிலைக்குச் செல்வதையும், நடுவர்களுடன் காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவதையும் நான் கவனித்திருக்கிறேன். இது கில்லின் இயல்பு அல்ல. அவர் அந்த வகையான ஆக்ரோஷத்தைக் காட்டத் தேவையில்லை, எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலமும் ஆக்ரோஷத்தைக் காட்டலாம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனிடம் இருந்து வெளிப்படும் இதுபோன்ற ஆக்ரோஷம் விளையாட்டுக்கு நல்லதல்ல.

ஸ்டம்புகளுக்கு அருகில் இருக்கும்போது ஆடியோவில் வரும் மொழி மற்றும் வார்த்தைகளில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். முந்தைய கேப்டன்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் இது ஒரு போக்காகிவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நீங்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அடுத்த தலைமுறை அதைக் கற்றுக்கொள்ளும்.

என்று மனோஜ் திவாரி கூறினார்.

Tags:    

Similar News