கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக் கோப்பையை வெல்லும் வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி- சஞ்சு சாம்சன்

Published On 2025-10-08 16:52 IST   |   Update On 2025-10-08 16:52:00 IST
  • மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 2007-ல் டி20 உலகக்கோப்பை வென்றது.
  • அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை.

இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது.

அப்போது "டி20 உலகக்கோப்பையை வெல்லும் வெற்றி பார்முலாவை கண்டறிய இந்திய அணிக்கு 16 ஆண்டுகள் ஆனது. அதற்கு ரோகித் பையாவிற்கு நன்றி" என தெரிவித்தார்.

அவர் கூறுவது போல, மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.

இந்தசூழலில் 11 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரண்டையும் கேப்டனாக ரோகித் சர்மா வென்றுகொடுத்தார். இந்த 2 கோப்பைகளையும் வெறும் 8 மாத இடைவெளியில் இந்திய அணி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News