தனி ஒருவனாக போராடிய பவுமா: இந்தியாவுக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
- தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 2 ஆவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ், முகத்து சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
124 ரன்கள் என்ற இலக்குடன் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.