கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2025-09-29 01:03 IST   |   Update On 2025-09-29 01:03:00 IST
  • இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
  • இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

புதுடெல்லி:

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News