கிரிக்கெட் (Cricket)
பீகார் சென்ற பிரதமரை குடும்பத்துடன் சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி
- குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி சாதனைப் படைத்தார்.
- தொடக்க வீரராக களம் இறங்கி பயமின்றி அதிரடியாக விளையாடியது அனைவரையும் ஈர்த்தது.
ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்திருந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பீகார் சென்றிருந்த பிரதமர் மோடி, சூர்யவன்ஷி சந்தித்தது தொடர்பான படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி "பாட்னா விமான நிலையத்தில், இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தேன். அவரது கிரிக்கெட் திறமைகள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.