கிரிக்கெட் (Cricket)
null

நவம்பர் 15-ந் தேதி என்றாலே retired hurt தான்.. தொடரும் கில்லின் சோகக் கதை

Published On 2025-11-15 13:02 IST   |   Update On 2025-11-15 13:22:00 IST
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இதில் பேட்டிங் செய்த சுப்மன் கில் 3 பந்துகளில் காயம் காரணமாக வெளியேறினார்.

கொல்கத்தா:

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்கரம் 31 ரன் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 12 ரன்னில் ஜான்சென் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 29 ரன்னில் வாஷிங்டன் சுந்தரும் 39 ரன்னில் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தர். அடுத்து வந்த கேப்டன் சுப்மன் கில் 3 பந்துகளை சந்தித்த நிலையில் கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி வெளியேறினார்.

நவம்பர் மாதத்தில் இதே (15-ந் தேதி) தேதியில் கடந்த 2023-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 79 ரன்கள் எடுத்து retired hurt ஆனார்.

அதேபோல 2 ஆண்டு கழித்து அதே நாளான நவம்பர் 15-ந் தேதி இன்றும் அவர் retired hurt ஆகி வெளியேறி உள்ளார். இது தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.

Tags:    

Similar News