கிரிக்கெட் (Cricket)

சுப்மன் கில்லின் பேட்டிங் திறனை சந்தேகித்த மைக்கேல் வாகன்..!

Published On 2025-07-04 15:04 IST   |   Update On 2025-07-04 15:04:00 IST
  • இந்தியா- இங்கிலாந்து தொடர் தொடங்கும்போது, சுப்மன் கில்லின் தரம், சராசரி 35க்கு போதுமானதாக இல்லை.
  • அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் சராசரி 45ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன்.

சுப்மன் கில் தலைமையிலான இந்தியாவின் இளம் டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து பந்து வீச்சை இந்திய வீரர்கள் தாக்குப்பிடிப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும், சமீபகாலமாக சரியாக பேட்டிங் செய்யாத சுப்மன் கில்லால் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடி வருகின்றனர். கேப்டன் சுப்மன் கில் முதல் டெஸ்டில் சதமும், 2ஆவது டெஸ்டில் இரட்டை சதமும் விளாசியுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் "இந்தியா- இங்கிலாந்து தொடர் தொடங்கும்போது, சுப்மன் கில்லின் தரம், சராசரி 35க்கு போதுமானதாக இல்லை. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவில் சராசரி 45ஆக இருக்கும் எனத் தெரிவித்திருந்தேன். ஆனால் இந்த தொடரிலேயெ அவரது சராசரி 45 ஆக இருக்கும் என நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில் 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் 269 ரன்கள் குவித்துள்ளார். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 147 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 8 ரன்களும் அடித்திருந்தார். 3 இன்னிங்சில் 424 ரன்கள் குவித்துள்ளார். இன்னிங்சில் சராசரி 141.3 ஆகும். டெஸ்ட் சராசரி என்றால் 212 ஆகும்.

Tags:    

Similar News