null
சதத்தை மகளுக்கு அர்பணித்த கே.எல். ராகுல் - வைரலாகும் வீடியோ
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் சதம் விளாசினார்.
- டெஸ்ட்டில் கேஎல் ராகுலின் 11-வது சதம் இதுவாகும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த வரிசையில், கே.எல். ராகுல் 197 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும்.
சதம் விளாசிய கேஎல் ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். இரண்டு விரலை வாயில் வைத்து கொண்டு கை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.