ரஞ்சி டிராபியில் இரட்டை சதமடித்த கருண் நாயர், ரவிச்சந்திரன்: கர்நாடக அணி 586 ரன் குவிப்பு
- கர்நாடகா அணி 2வது நாளில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் கருண் நாயர், ஸ்மான் ரவிச்சந்திரன் இரட்டை சதமடித்து அசத்தினர்.
திருவனந்தபுரம்:
ரஞ்சி டிராபி தொடரின் 3வது சுற்று போட்டி நடந்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட்ட கருண் நாயர் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கேரளா அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
கர்நாடகா அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. 4வது விக்கெட்டுக்கு இணைந்த கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி இதுவரை 183 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்நிலையில், 2வது நாளில் கர்நாடக அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கருண் நாயர் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 233 ரன்னில் அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு கருண் நாயர்-ரவிச்சந்திரன் ஜோடி 343 ரன்கள் சேர்த்து அசத்தியது. அவரைத் தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய ரவிச்சந்திரனும் இரட்டை சதமடித்தார்.
இறுதியில், கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 586 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவிச்சந்திரன் 220 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இரண்டாம் நாள் முடிவில் கேரளா அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 21 ரன் எடுத்துள்ளது.