கிரிக்கெட் (Cricket)

ஜான் சீனா-வின் Insta பதிவில் விராட் கோலி

Published On 2025-04-09 15:26 IST   |   Update On 2025-04-09 15:26:00 IST
  • ஆர்சிபி அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
  • ஆர்சிபி அணிக்காக 18-வது சீசனில் விராட் கோலி விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 200 -க்கும் கூடுதலாக ரன்களை குவிப்பது ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கள் முறையே டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.

இந்த ஐபிஎல் தொடரிலாவது ஆர்சிபி கோப்பையை வெல்லுமா என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த அளவுக்கு ஆர்சிபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆர்சிபி அணிக்காக 18-வது சீசனில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி விளையாடி வருகிறார். அவருக்காக இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்ல வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அணியின் ரசிகர்கள் வரை வேண்டி கொள்கிறார்கள்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் படத்தை உலகில் மிகவும் பிரபலமான மல்யுத்த வீரர்களில் ஒருவரான ஜான் சீனா தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் ஜான் சீனாவின் பிரபலமான ஸ்டைலில் கைகளை அசைப்பார். அதுபோல விராட் கோலி சுண்டு விரலில் ஒரு மோதிரம் அணிவித்தபடி கைகளை வைத்துள்ளார். இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

ஜான் சீனா ஒரு பிரபல அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். அவர் WWE (World Wrestling Entertainment) உலகில் மிகவும் பிரபலமான மல்யுத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். அவர் 16 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News