ஐ.பி.எல்.(IPL)
null

மனிதநேயம் எங்கே?.. சுற்றிலும் உயிரற்ற உடல்கள்.. உள்ளே கொண்டாட்டம் - ஆர்சிபி மீது வலுக்கும் கண்டனம்

Published On 2025-06-04 22:40 IST   |   Update On 2025-06-05 07:43:00 IST
  • போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
  • விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசவில்லை.

ஐபிஎல் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியை காண பலர் மைதானம் முன் திரண்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போதுமான ஏற்பாடுகளைச் செய்யாததற்காக மாநில அரசு விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மைதானத்திற்கு வெளியே இறப்புகள் ஏற்பட்டபோதும், உள்ளே ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது சமூக ஊடகங்களில் எதிற்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

"மக்கள் கூட்ட நெரிசலில் இறந்து கொண்டிருக்கும் போது, வெற்றி கொண்டாட்டத்தில் அதைப் பற்றிய குறிப்பு கூட இல்லாமல் ஒளிபரப்பப்படுவது நம்பமுடியாததாக இருக்கிறது" என ஒரு எக்ஸ் பயனர் தெரிவித்துள்ளார்.

"உயிரற்ற உடல்கள் சுற்றிக் கிடக்கும் போது கூட சின்னசாமி ஸ்டேடியத்தில் கொண்டாட்டம்.. மனிதநேயம் எங்கே? இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

மரணத்திலும் அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். இது அவமானகரமானது, கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. பொறுப்பானவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்" என்று மற்றொரு பதிவில் கூறப்பட்டுள்ளது.

விராட் கோலி தனது உரையில் உயிரிழப்புகள் குறித்து பேசாததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையில், மைதானத்திற்குள் இருந்தவர்களுக்கு விபத்து குறித்து தெரியாது என்று பிசிசிஐ கூறுகிறது.

இந்த சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கேட்டுக் கொண்டார். இதற்கு காரணம் ஏற்பாட்டாளர்கள் தான் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறினார். 

Tags:    

Similar News