ஐ.பி.எல்.(IPL)
null

கேப்டன் பதவியில் இருந்து விலகல் குறித்து மவுனம் கலைத்த விராட் கோலி

Published On 2025-05-06 18:18 IST   |   Update On 2025-05-06 18:38:00 IST
  • கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பியதால் கேப்டன்ஷிப் பற்றி முடிவெடுத்தேன்.
  • இந்தியாவுக்காக 7 - 8 வருடங்கள் கேப்டனாக இருந்த நான் பெங்களூருவை 9 வருடங்கள் தலைமைத் தாங்கினேன்.

நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்ல கடுமையாக போராடி வருகிறது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 505 ரன்கள் விளாசி அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியுடன் பங்காற்றி வருகிறார்.

இந்நிலையில் இந்தியா, ஆர்சிபி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து விராட் கோலி மவுனம் கலைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மற்ற அணிக்கு சென்று விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும் என்று என்னிடம் சொன்னார்கள். என்னுடைய கேரியரின் உச்சகட்ட சமயத்தில் வேறு அணிக்கு சென்று விளையாட எனக்கும் வாய்ப்புகள் இருந்தது. 2016 - 2019 காலங்களில் அந்தப் பரிந்துரைகள் ஏராளமாக வந்தன. ஒரு கட்டத்தில் அது எனக்கு மிகவும் கடினமானது.

ஏனெனில் எனது கேரியரில் நிறைய நடந்தது. இந்தியாவுக்காக 7 - 8 வருடங்கள் கேப்டனாக இருந்த நான் பெங்களூருவை 9 வருடங்கள் தலைமைத் தாங்கினேன். பேட்டிங் ரீதியாக என் மீது ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. அதனால் 24 மணி நேரமும் என்னை நான் அம்பலப்படுத்தப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.

அப்போது எந்த மதிப்பீடும் இல்லாமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பியதால் கேப்டன்ஷிப் பற்றி முடிவெடுத்தேன்.

ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து விளையாடலாமா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இருப்பினும் இந்தியாவுக்காக எனது கேரியரில் நிறைய வென்றுள்ள நான் ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.

அதனால் பெங்களூருவை விட்டு வெளியேறி புதிய அணியில் சாதிக்க வேண்டுமா? என்ற முடிவெடுக்க வேண்டியிருந்தது. அது போன்ற சூழ்நிலையில் வேறு அணிகளை விட இத்தனை வருடங்களாக பெங்களூருவுக்கு விளையாடியதால் ரசிகர்களிடம் ஏற்பட்ட உறவு முக்கியம் என்று நினைத்தேன். அதனால் வெற்றி, தோல்வி பரவாயில்லை. இதுவே என்னுடைய வீடு.

என்று விராட் கோலி கூறினார்.

Tags:    

Similar News