ஐ.பி.எல்.(IPL)
null

வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள்.. விராட், அனுஷ்கா ஜோடி இன்ஸ்டாவில் வருத்தம்

Published On 2025-06-05 06:06 IST   |   Update On 2025-06-05 06:07:00 IST
  • உடைந்து போன இதயத்தின் எமோஜியை வெளியிட்டுள்ளார்.
  • பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் தளத்தில் வருத்தியுள்ளார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன்" என்று குறிப்பிட்டு ஆர்சிபி அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்து, உடைந்து போன இதயத்தின் எமோஜியை வெளியிட்டு உள்ளார்.

இதேபோன்று, பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் தளத்தில் வருத்தியுள்ளார். 

முன்னதாக உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், மைதானத்தினுள்ளே வெற்றி கொண்டாட்டத்தை ஆர்சிபி தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News