null
IPL 2025: முதல் மும்பை வீரராக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய திலக் வர்மா
- மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
- 23 பந்துகளில் 25 ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 19 ஆவது ஓவரில் மும்பை வீரர் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
19வது ஓவரில் 7 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, 23 பந்துகளில் 25ரன்கள் அடித்திருந்த திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்காக ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறிய முதல் வீரரானார் திலக் வர்மா.
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் அணியில் அஸ்வினும் பஞ்சாப் அணியில் அதர்வா டைடேவும் குஜராத் அணியில் சாய் சுதர்சனும் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறியுள்ளனர்.