IPL கோப்பைக்காக காத்திருக்கிறோம்- வீடியோ வெளியிட்டு RCB அணிக்கு டி.கே.சிவக்குமார் வாழ்த்து
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
- 2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும்.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும் ஆர்சிபி அணிக்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
2 அணிகளின் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது.
இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். கர்நாடகா உங்களோடு இருக்கிறார்கள். அரசு சார்பில் உங்களை வாழ்த்துகிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த கோப்பைக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.