ஐ.பி.எல்.(IPL)
null

மீண்டும் ஆர்சிபி அணியில் இணைந்தனர் வெளிநாட்டு வீரர்கள்

Published On 2025-05-15 14:29 IST   |   Update On 2025-05-15 14:35:00 IST
  • ஆர்சிபி அணியில் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் உள்ளிட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
  • பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக இவர்கள் உடனடியாக சொந்த நாடு திரும்பினர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதனால் பாகிஸ்தான் Loc பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்தியா முறியடித்து பதிலடியும் கொடுத்தது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.

பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியேர்ர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.

புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 11 போட்டிகளில் விளைாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வருகிற 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியையும், 28ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியையும், 27ஆம் தேதி லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது.

Tags:    

Similar News