ஐ.பி.எல்.(IPL)

ஷ்ரேயஸ் அபாரம்: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப்

Published On 2025-06-02 01:46 IST   |   Update On 2025-06-02 01:46:00 IST
  • முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
  • அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

அகமதாபாத்:

ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.

அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.

3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.

அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.

இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tags:    

Similar News