ஐ.பி.எல்.(IPL)

ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால்...அடுத்து: தோல்வி குறித்து எம்.எஸ்.தோனி

Published On 2025-04-21 04:05 IST   |   Update On 2025-04-21 04:05:00 IST
  • மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
  • 6-வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை:

மும்பையில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 6வது தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தோல்விக்கு பிறகு சென்னை கேப்டன் தோனி கூறியதாவது:

அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக உணர்ச்சி வசப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால் அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த 2020 ஐ.பி.எல். சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது. அதிலிருந்து எப்படி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை. அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தாலே போதுமானது.

சிறப்பாக செயல்பட்ட மும்பை அணிக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News