ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: மும்பையை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது லக்னோ

Published On 2025-04-04 23:28 IST   |   Update On 2025-04-04 23:28:00 IST
  • டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.

லக்னோ:

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 60 ரன்னும், மார்க்ரம் 53 ரன்னும் அடித்தனர்.

மும்பை அணி சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. வில் ஜாக்ஸ் 5 ரன்னிலும், ரிக்கல்டன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

நமன் தீர் அதிரடியாக ஆடி 24 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 67 ரன்னில் வெளியேறினார். திலக் வர்மா 25 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. மும்பை அணி பெற்ற 3-வது தோல்வி இதுவாகும்.

Tags:    

Similar News