ஐ.பி.எல்.(IPL)

நடிகை போட்டோவுக்கு லைக் போட்டது ஒரு குத்தமா! - நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு கோலி விளக்கம்

Published On 2025-05-03 06:51 IST   |   Update On 2025-05-03 06:51:00 IST
  • நடிகை அவ்னீத் கவுரின் புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டது இணையத்தில் பேசுபொருளானது.
  • நடிகையின் கவர்ச்சி படத்திற்கு லைக் போடுவதா! என நெட்டிசன்கள் விராட் கோலியை வறுத்தெடுத்தனர்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி அணி 7 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணியில் விளையாடி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி நடப்பு சீசனில் 10 போட்டிகளில் 6 அரை சதம் உள்பட 443 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்னீத் கவுரின் கவர்ச்சி புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் போட்டது இணையத்தில் பேசுபொருளானது. நடிகையின் கவர்ச்சி படத்திற்கு லைக் போடுவதா! என நெட்டிசன்கள் பலரும் விராட் கோலியை இணையத்தில் வறுத்தெடுத்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார். அவரது ஸ்டோரியில், "நான் எனது சமூக ஊடக பதிவுகளை அழித்தபோது, தவறாக லைக் விழுந்திருக்கலாம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதற்கு பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையற்ற அனுமானங்களை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

கோலியின் விளக்கதிற்கு பிறகு, 'நடிகை போட்டோவுக்கு லைக் போட்டது ஒரு குத்தமா' என நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாகவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News