ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: ஒரே போட்டியில் 3 வரலாற்று சாதனைகள் படைத்த விராட் கோலி

Published On 2025-05-28 10:50 IST   |   Update On 2025-05-28 10:50:00 IST
  • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார்.
  • பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்தது.

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 30 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார். வார்னர் 62 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில் கோலி 63 அரைசதங்களை அடித்துள்ளார்.

மேலும் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக 9000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

9030 - விராட் கோலி (RCB)

6060 - ரோகித் சர்மா (MI)

5934 - ஜேம்ஸ் வின்ஸ் (ஹாம்ப்ஷயர்)

5528 - சுரேஷ் ரெய்னா (CSK)

5314 - எம்.எஸ். தோனி (CSK)

மேலும், ஒரு ஐபிஎல் வரலாற்றில் 5 முறை ஒரு சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல்: ஒரு சீசனில் 600+ ரன்கள்:

5 - விராட் கோலி (2013, 2016, 2023, 2024, 2025)

4 - கே.எல். ராகுல் (2018, 2020, 2021, 2022)

3 - கிறிஸ் கெய்ல் (2011, 2012, 2013)

3 - டேவிட் வார்னர் (2016, 2017, 2019)

Tags:    

Similar News