ஐ.பி.எல்.(IPL)

சிஎஸ்கேவுக்கு எதிராக ஆட்டநாயகன்.. கோலி, தவான் சாதனைகளை முறியடித்த ரோகித்

Published On 2025-04-21 14:59 IST   |   Update On 2025-04-21 14:59:00 IST
  • சிஎஸ்கே அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
  • சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோகித் சர்மா 77 குவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. ரோகித் சர்மா 77 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பதிவு செய்த பட்டியலில் மும்பை அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல்லில் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள்

24 - மும்பை அணி vs கேகேஆர் (35 போட்டிகள்)

21 - சென்னை அணி vs ஆர்சிபி (34 போட்டிகள்)

21 - கேகேஆர் vs பஞ்சாப் (34 போட்டிகள்)

21 - மும்பை அணி vs சிஎஸ்கே (39 போட்டிகள்)*

இப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். அத்துடன் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.

ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தலா 19 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா 20-வது முறை இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார். அதேசமாயம் ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

அதிக ஆட்டநாயகன் விருதுகள்

25 - ஏபி டெவிலியர்ஸ்

22 - கிறிஸ் கெய்ல்

20- ரோகித் சர்மா

19 - விராட் கோலி

18 - டேவிட் வார்னர்

18 - எம்எஸ் தோனி

இப்போட்டியில் ரோகித் சர்மா 76 ரன்களை எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த 2-வது வீரர் எனும் சாதனையை படைத்துள்லார்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்

விராட் கோலி - 8326 ரன்கள்

ரோகித் சர்மா - 6786 ரன்கள்

ஷிகர் தவான் - 6769 ரன்கள்

டேவிட் வார்னர் - 6565 ரன்கள்

சுரேஷ் ரெய்னா - 5528 ரன்கள்

Tags:    

Similar News