ஐ.பி.எல்.(IPL)
IPL 2025: மிக சிறந்த கேட்சுக்கான விருதை வென்றார் ஐதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ்
- டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார்
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று பேசப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு சீசனின் மிகசிறந்த கேட்சுக்கான விருதை ஐதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.