தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவர் என எதிர்பார்ப்பு.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஏலத்தில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகிய இந்திய வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் 2025 ஏலத்தின் முதல் நாளில் 72 வீரர்களுக்கு 467.95 கோடி செலவழிந்துள்ளது.
வைபவ் அரோராவை 1.8 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
யாஷ் தாகூரை 1.60 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
மோகித் சர்மாவை 2.20 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
விஷ்ணு வினோத்தை 95 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்
ஆகாஷ் மாத்வாலை 1.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
ரஷிக் தரை 6 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- அடிப்படை விலை 30 லட்சம்
ஆசுதோஷ் சர்மாவை 3.80 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்
மஹிபால் லாம்ரோர் 1.70 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்
விஜய் சங்கரை 1.20 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்