கில்லுக்கு காயம்... SA-விற்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணிக்கான கேப்டன் ரேஸில் முந்துவது யார்?
- சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், காயம் காரணமாக தன் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து கில் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வர வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. அண்மைய காலங்களில் பண்ட் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் கேப்டன் வாய்ப்பு கேஎல் ராகுளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு அதிகப்பமுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக பிசிசிஐ நாளை மும்பையில் தேர்வுக் குழு கூட்டத்தை நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.