5 விக்கெட் விழ்த்திய பும்ரா: 159 ரன்னில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்
- இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ராம், ரியான் ரிக்கல்டன் களமிறங்கினர். இந்த பும்ரா ஓவரை மட்டும் தடுத்து ஆடினார். சிராஜ் ஓவரை சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டனர். இதனால் அக்சர் படேலுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவர் ஓவரையும் அதிரடியாக விளையாடினர்.
இந்த ஜோடி முதல் 10 ஓவருக்கு 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரிக்கல்டன் போல்ட் ஆகி வெளியேறினார். அவர் 22 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து 13-வது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் மார்க்ரம் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கேப்டன் பவுமா, 3 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் துருவ் ஜூரலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனையடுத்து வியான் முல்டர்- டோனி டி சோர்ஜி ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி வியான் முல்டர் 24, டோனி டி சோர்ஜி 24 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து கைல் வெர்ரேய்ன் 16, மார்கோ ஜான்சன் 0, கார்பின் போஷ் 3, சைமன் ஹார்மர் 5, கேசவ் மகராஜ் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டும் சிராஜ், குல்தீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.