கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20: இஷான் கிஷன், அக்சர் படேல் அணிக்கு திரும்புகின்றனர்

Published On 2026-01-31 11:13 IST   |   Update On 2026-01-31 11:13:00 IST
  • ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • ரவி பிஷ்னோய் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். எனவே, இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பழைய ஃபார்முக்கு திரும்புவது முக்கியமானதாகும்.

கடந்த போட்டியில் சிறுகாயம் (Niggle) காரணமாக இஷான் கிஷன் விளையாடவில்லை. இவர் இன்றைய போட்டியிால் விளையாட வாய்ப்புள்ளது. அதேபோதுல் முதல் போட்டியின்போது கைவிரலில் காயம் ஏற்பட்ட அக்சர் படேல் மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தெரிகிறது.

அல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. இதனால் இருவரும் அணியில் இணைந்தால் ரவி பிஷ்னோய் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடவில்லை என்றால், திலக் வர்மா அணியில் இடம் பிடித்தால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News