ரஞ்சி கோப்பை: ஹர்விக் தேசாய் இரட்டை சதத்தால் 453 ரன்கள் குவித்த சவுராஷ்டிரா
- முதலில் ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது.
- சவுராஷ்டிரா சார்பில் ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட் வீழ்த்தினார்.
சண்டிகர்:
ரஞ்சி கோப்பை தொடருக்கான போட்டி சண்டிகரில் நடந்து வருகிறது. இங்கு சவுராஷ்டிரா, சண்டிகர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வ்ய் செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சண்டிகர் அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது.
சவுராஷ்டிரா அணி சார்பில் ஜெயதேவ் உனத்கட் 4 விக்கெட்டும், சேட்டன் சகாரியா, சிராக் ஜானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிர அணி முதல் இன்னிங்சில் 106.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 453 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
போனஸ் புள்ளியுடன் வெற்றிபெற வேண்டும் என்பதால் அந்த அணி சீக்கிரம் டிக்ளேர் செய்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹர்விக் தேசாய் இரட்டை சதம் கடந்து அசத்தினார்.
தனது முதலாவது இரட்டை சதத்தை அடித்த ஹர்விக் தேசாய் 200 ரன்னுடன் (305 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்)அவுட் ஆகாமல் இருந்தார்.
ஜெய் கோஹில் 98 ரன்னும், அர்பித் வசவதா 96 ரன்னும் எடுத்து அவுட்டாகி சதத்தை தவறவிட்டனர்.
இதையடுத்து, 317 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சண்டிகர் அணி 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.