சொந்த மண்ணில் 2-வது முறையாக டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா: கம்பீர் விளக்கம்
- 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
- நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கவுகாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேசமயம் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக இந்திய அணி ஹோமில் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளார் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த காலங்களிலும் இதுபோன்ற சறுக்கல்கள் எற்பட்டுள்ளன. ஆனால் யாராவது ஒருவர் நான் இதை தடுத்தாக வேண்டும் என்று விளையாட வேண்டும். அது இம்முறை நடக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்த அணி வேறு. அனுபவம் வாய்ந்தது. இந்த அணி வேறு. நீங்கள் ஒப்பிட முடியாது. அவர்களுக்கு நீங்கள் நேரம் கொடுக்க வேண்டும்.
நான் அனைவரிடமிருந்தும் இன்னும் சிறப்பாக எதிர்பார்க்கிறேன். நீங்கள் ஒரு தனி நபரை மட்டும் குறை சொல்ல முடியாது என கம்பீர் கூறினார்.