கிரிக்கெட் (Cricket)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளிப்பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?

Published On 2025-11-16 23:00 IST   |   Update On 2025-11-16 23:00:00 IST
  • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.
  • இதில் இந்தியா அணி எளிய இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தது.

துபாய்:

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு (2025 - 2027) உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதில் 100 சதவீத புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் தொடருகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி (66.67 சதவீதம்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தில் உள்ளது.

இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி (66.67 சதவீதம்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி அடைந்த இந்திய அணி (54.17 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 5-வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

Tags:    

Similar News