null
ருதுராஜ் - கோலி அதிரடி சதம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- இந்திய தரப்பில் ருதுராஜ், விராட் கோலி சதம் அடித்தனர்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ரோகித் களமிறங்கினர். இதில் ரோகித் 8 பந்தில் 14 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து ருதுராஜ்- விராட் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர்.
ருதுராஜ் 105 ரன்னிலும் விராட் கோலி 102 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் - ஜடேஜா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் அரை சதம் கடந்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.