கிரிக்கெட் (Cricket)
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி
- பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது.
- பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. சல்மான் ஆகா சதம் அடித்தார்.
அவர் 87 பந்தில் 105 ரன்னும் (9 பவுண்டரி), ஹூசைன் தலத் 62 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹசரங்கா 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் ஆடிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹசரங்கா 52 பந்தில் 59 ரன் (7 பவுண்டரி) எடுத்தார். ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.